Hot Posts

6/recent/ticker-posts

Greater Galangal

  

Greater Galangal

 Alpinia galanga

                   

Alpinia galanga (L.) Willd. and Alpinia officinarum Hence, commonly known as greater galangal and lesser galangal, respectively, belong to the family of Zingiberaceae (ginger). Due to their spicy flavor and aromatic odors, both of the two rhizomes have long been used as flavoring ingredients and spices in Asia.

They also were well-known traditional Chinese medicine and have been widely used as a remedy for gastrointestinal diseases, such as stomachache, dyspepsia, and gastrofrigid vomiting. A. galanga is rich in a variety of phenolic compounds and essential oils, whereas A. officinarum is rich in flavonoids and diarylheptanoids. The species occurs naturally in shady and marshy lands in tropical areas, particularly in South India, and North-East India; elsewhere, it is cultivated.

1. High In Antioxidants

Galanga has an ample amount of antioxidants that helps in treating infections and has bacterial properties. It promotes balanced nutrition as it contains essential vitamins and minerals such as Vitamin A,C, iron and sodium. This special ingredient only has 70 calories.

2. Helps Fight Inflammation

Alpinia Galanga helps in fighting inflammation and also reduces pain. This extract is very beneficial for arthritis. Studies show that people taking galangal and ginger extract faced a reduction in knee pain It has high inflammatory properties that treat skin conditions, gastric issues etc.

3. Protects Against Infections

It is a natural antibacterial that fights against infections and bacterias. Studies show that essential oil which has galanga extract helps in treating fungi, bacteria, yeast etc. Adding alpinia galanga extract to your recipes could help you strengthen your immunity preventing you from falling sick more often.

4.  Protects Against Cancer

Alpinia Galanga helps prevent cancer symptoms from spreading and its powerful properties help kill the cancer cells. It helps in fighting against skin, liver, breast cancer etc. Alpinia extract also contains ginger and turmeric, cardamom which prevents cancer and protects your body from insulating germs.

5. Acts As A Caffeine Replacement

Alpinia Galanga is a stimulant-free energy ingredient that increases energy naturally. It is a caffeine replacement that increases attention, alertness without an energy crash. Health freaks have started having caffeine free protein for a healthy body. Caffeine-related products lead to insomnia, drowsiness and headaches in the long run.

Alpinia Galanga can be taken in the form of juices, soups and supplements. It also improves your skin as it is an antiseptic that treats acne and treats various skin disorders. It is a natural remedy to treat various illnesses and ailments. It is a worth it ingredient to add to your daily diet.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சித்தரத்தை

 

 சித்தரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது

இடுப்பு வலி போக்கும் சித்தரத்தை நீர் மருந்து :

அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

ஒவ்வாமை :

சிலருக்கு ஒவ்வாமை அல்லது சுவாச பாதிப்பினால் ஏற்படும் ஜலதோசத்தால், கடுமையான இருமல் ஏற்படும், பேசும்போது இருமல் தொடர்ந்து வந்து, தொண்டையை வற்றச் செய்து, பேச்சைத் தடைசெய்துவிடும்.

இருமலை தணிக்க :

இந்த பாதிப்பை போக்க, உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலாக பல நாட்கள் தொல்லை தந்து வந்த இருமல் யாவும் ஓடிவிடும். சித்தரத்தை சளியை ஏற்படுத்தும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் வகை பாக்டீரியாக்களை அழித்து ஒழிக்கும் ஆற்றல் மிகுந்து விளங்குவதால்தான், அநேகம் மேலைமருந்துகளில், சித்தரத்தையின் மூலங்கள் சேர்க்கப்படுகின்றன.

மூச்சுத்திணறல் போக்கும் சித்தரத்தை :

சிலருக்கு ஜலதோசத்தினால் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூக்கின் வழியே மூச்சு விடமுடியாமல், வாய் வழியே மூச்சை விட்டு வருவர், சிலருக்கு தீவிரமான வறட்டு இருமலின்போது, கடுமையான நெஞ்சு வலி தோன்றும். இந்த பாதிப்புகள் யாவும் அகல, சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல் அல்லது பொடி, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை ஒரே அளவில் எடுத்து, பொடியாக்கி, அதை எடுத்து, அரை தம்ளர் நீரில், தேன் கலந்து பருகி வர, மூக்கடைப்பு சளித் தொல்லை, மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டது, ஜுரம் மற்றும் வறட்டு இருமல் பாதிப்புகள் நீங்கும்.

மூட்டு வலி தீர :

முதுமையின் பாதிப்பால், உடலில் வியாதிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து, கை கால் மூட்டுகளில், எலும்புகளின் இணைப்பில் வலிகள் தோன்றும், இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்கார நடக்க முடியாமல் சிரமப்படுவர்.

தொண்டை புண்ணிற்கு :

தொண்டைப்புண் பாதிப்பை போக்கும் சித்தரத்தை சூரணம். சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, சரியாக பேச விடாமல் துன்பங்கள் தந்துவந்த தொண்டைப்புண் பாதிப்புகள் குணமாகிவிடும்.

அஜீரணத்திற்கு :

உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும், அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர, குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும். மேலும், இதுவே, வறண்ட இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக, சித்தரத்தை மருந்து அமையும்

 


Post a Comment

0 Comments